நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

சோயா தயாரிப்பு உற்பத்தியாளர்கள் தரநிலைக் (ISI) குறி பயன்படுத்துவதற்கு இந்தியத் தரங்கள் பணியகம் BIS-ன் சான்றிதழைப் பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள்

Posted On: 10 MAR 2022 6:05PM by PIB Chennai

9 மார்ச் 2022 அன்று 'சோயா தயாரிப்புகள் பற்றிய இந்தியத்  தரநிலைகள்' குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல்படுத்தல் வலையரங்கிற்கு இந்தியத் தரங்கள் பணியகம் ஏற்பாடு செய்திருந்தது. பொது மக்களிடையே அதிகரித்து வரும் ஆரோக்கிய உணர்வுடன், சோயா மொச்சை உபயோகமானது கடினமான காய்கறி புரதம் (சோயா   பாடி அல்லது சோயா கட்டிகள் எனப்  பிரபலமாக அறியப்படுகிறது) சோயா பால், டோஃபு, சோயாத்தயிர் போன்ற வடிவத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இந்த சோயா தயாரிப்புகளின் தரம் மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்க, இயல்பியல் , வேதியல்  மற்றும் நுண்ணுயிரியல் அளவுருக்கள் அடிப்படையில் அவற்றின் சோதனை முறைகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. சோயா தயாரிப்புகளில் இந்திய தரநிலைகளை செயல்படுத்துதல் மற்றும் சான்றளிப்பது சோயா தயாரிப்புகளை இந்திய உணவில் ஒருங்கிணைக்க உதவும். எனவே, சோயா தயாரிப்புகளின் மேம்பட்ட தரம் மற்றும் பாதுகாப்பு, உற்பத்தியாளருக்கு சிறந்த விலையை வழங்குவதன் மூலம் பயனளிக்கும். மேலும்  நுகர்வோர் ஒட்டுமொத்த பொது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாதுகாப்பான தயாரிப்புகளைப் பெறுவார்கள்.

குறு மற்றும் நடுத்தர தொழில்துறையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் வலையரங்கில் கலந்து கொண்டனர். சோயா பொருட்கள் மீதான தற்போதைய இந்திய தரநிலைகள் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள புதிய தரநிலைகள் தொடர்பான தகவல்கள் வலையரங்கில் பரிந்துரைக்கப்பட்ட முக்கியமான தேவைகளை எடுத்துக்காட்டும் வகையில் பகிரப்பட்டன.  உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளில் தரநிலைக் (ISI) குறியைப்   பயன்படுத்துவதற்கு BIS சான்றிதழைப் பெற ஊக்குவிக்கப்பட்டனர். BIS -யின் உறுதியளிப்பு மதிப்பீட்டுத் திட்டம் மற்றும் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் செயல்முறை பற்றிய தகவல்களும் வழங்கப்பட்டன.

சோயா பொருட்களுக்கான ஏழு இந்திய தரநிலைகளை BIS வெளியிட்டுள்ளது, அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

    IS 7835 : 2013 – உண்ணக்கூடிய நடுத்தர - ​​கொழுப்பு சோயா மாவு - விவரக்குறிப்பு (முதல் திருத்தம்)

    IS 7836 : 2013 – உண்ணக்கூடிய குறைந்த - கொழுப்பு சோயா மாவு - விவரக்குறிப்பு (முதல் திருத்தம்)

    IS 7837 : 2013 – உண்ணக்கூடிய முழு - கொழுப்பு சோயா மாவு - விவரக்குறிப்பு (முதல் திருத்தம்)

    IS 16489: 2018 – சோயபால்  (மட்டுப்பால் அல்லாத பொருள்) — விவரக்குறிப்பு

    IS 17651: 2021 – சோயாக் கொட்டைகள்  — விவரக்குறிப்பு

    IS 17652: 2021 - சோயா வெண்ணெய்  - விவரக்குறிப்பு

    IS 17673: 2021 – சோயா  அமரகந்த் — விவரக்குறிப்பு

புதிய தயாரிப்புகளை உள்ளடக்கிய சோயா தயாரிப்புகளுக்கான புதிய இந்திய தரநிலைகளை உருவாக்கும் பணியில் பிஐஎஸ் ஈடுபட்டுள்ளது. அதற்கு  போபால்  மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்  கோரிக்கை விடுத்துள்ளது. பங்கேற்பாளர்கள் வரைவு தரநிலைகள் குறித்து, அவை  பொதுக்  கருத்துகளுக்கெனத்  திறந்திருக்கும்போது, கருத்து தெரிவிக்க ஊக்குவிக்கப்பட்டனர்..

*********



(Release ID: 1804852) Visitor Counter : 190


Read this release in: English , Urdu , Hindi , Marathi