நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியத் தரநிலைகள் பணியகம், ஐஐடி ரூர்க்கியுடன் ‘பிஐஎஸ் தரநிலைப் பேராசிரியர் இருக்கையை ’ நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

Posted On: 10 MAR 2022 6:07PM by PIB Chennai

இந்தியத்  தரநிலைகள் பணியகம் (BIS), ரூர்க்கி இந்தியத் தொழில்நுட்பக் கழகம்   (IITR)  ஆகியவை 10 மார்ச் 2022 அன்று 'BIS தரநிலைப்படுத்தல் தலைவர் பேராசிரியர்' இருக்கையை ரூர்க்கி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன. தரநிலைப்படுத்தல் மற்றும் உறுதிப்படுத்திடும் மதிப்பீட்டிற்கான ஒரு நிறுவனத்தில் இந்தியத்  தரநிலைகள் பணியகத்தால்  நிறுவப்பட்ட முதல் தரநிலைப்படுத்தல் இருக்கைப் பதவி இதுவாகும்.

சிவில், மின்சரையால் , எந்திரவியல் , வேதியல் , நிலநடுக்கப் பொறியியல், நீர் வளங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் மேம்பாடு மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நாட்டில் தரப்படுத்தல் மற்றும் உறுதிப்படுத்திடும்  மதிப்பீடு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கற்பித்தல் மற்றும் பயிற்சிக்கு இந்தப்  புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.  உள்கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவ உயிரித்  தொழில்நுட்பம் மற்றும் நானோ தொழில்நுட்பம், உயிரித்  தொழில்நுட்பம், உயிரியல் பொருட்கள் போன்றவற்றில்  தரநிலைகள் எவ்வாறு புதுமைகளை ஊக்குவிக்கலாம் மற்றும் எளிதாக்கலாம் என்பது குறித்து மாணவர்களுக்கு உணர்வூட்டுவதுடன் அவர்களை  எதிர்கால தொழில்சார் சவால்களுக்கு சிறப்பாக தயார்படுத்துவதற்கும் இது உதவும்.

இந்தியத்  தரநிலைகள் பணியகத் தலைமை இயக்குனர், திரு  பிரமோத் குமார் திவாரி இந்த முயற்சிக்கான அர்ப்பணிப்பையும் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

*******


(Release ID: 1804843) Visitor Counter : 240


Read this release in: English , Urdu , Urdu , Hindi , Marathi