பாதுகாப்பு அமைச்சகம்
லோங்கேவாலாவுக்கு பயணம் செய்த ஆஸ்திரேலிய ராணுவ தளபதி பொக்ரானில் ஒருங்கிணைந்த ராணுவ ஒத்திகையைப் பார்வையிட்டார்
Posted On:
10 MAR 2022 5:28PM by PIB Chennai
ஆஸ்திரேலிய ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் ரிச்சர்ட் மேக்ஸ்வெல் பர் 2022 மார்ச் 8 முதல் இந்தியாவில் 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ராஜஸ்தானில் மார்ச் 10 அன்று அவர். லோங்கேவாலா, பொக்ரான், ஜோத்பூர் ஆகிய இடங்களைப் பார்வையிட்டார். லோங்கேவாலாவுக்கு அவர் பயணம் செய்த போது, லெப்டினன்ட் ஜென்ரல் ராகேஷ் கபூர் வரவேற்றார். முன்னதாக, 1971 –ல் இந்தியா- பாகிஸ்தான் போரின் போது, உயிர்நீத்த இந்திய ராணுவத்தினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள லோங்கேவாலா போர் நினைவுச் சின்னத்தில் ஆஸ்திரேலிய ராணுவ தளபதி அஞ்சலி செலுத்தினார்.
போர் நினைவுச் சின்னங்களை உருவாக்கி பராமரிக்கும் இந்திய ராணுவத்தின் முயற்சிகளை பாராட்டிய அவர், இந்திய வீரர்களின் மாண்புகளையும், துணிவையும், சாமானிய மக்களும் அறிந்து கொள்ள இவை பாலங்களாக இருக்கின்றன என்று கூறினார்.
பொக்ரானில் உள்ள துப்பாக்கிச்சுடும் பயிற்சி நிலைகளுக்கு சென்றிருந்த லெப்டினன்ட் ஜென்ரல் ரிச்சர்ட் பர், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட போர் தளவாடங்களின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.
***************
(Release ID: 1804830)