கலாசாரத்துறை அமைச்சகம்

சாகித்ய அகாடமியின் இலக்கிய விழா: 2022 மார்ச் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது: 24 எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகள்

Posted On: 09 MAR 2022 4:16PM by PIB Chennai

இந்தியாவின் மிகப் சிறந்த இலக்கிய திருவிழாவான, சாகித்திய அகாடமியின் எழுத்துக்கள் விழா ‘சாகித்யோத்சவ்’ புதுதில்லியில் மார்ச் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக இந்த ‘எழுத்துக்கள் விழா 2022’ இருக்கும். இந்த நிகழ்வுகள், சுதந்திரம் அல்லது சுதந்திர இயக்கத்தின் கருப்பொருளை கொண்டிருக்கும். இந்த விழாவில், இந்திய சுதந்திர இயக்கம் மற்றும் விடுதலையின் அம்ரித் மஹோத்ஸவம் தொடர்பான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்படும். 

அகாடமியின் கண்காட்சியுடன் இந்த விழா தொடங்குகிறது. இதை மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் திரு.அர்ஜூன் ராம் மெஹ்வல் தொடங்கி வைக்கிறார்.  இந்த கண்காட்சி அகாடமியின் சாதனைகளை வெளிப்படுத்தும்.  24 இந்திய மொழிகளைச் சேர்ந்த 26 இளம் எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ‘இளம் இந்தியாவின் எழுச்சி ( The Rise of Young India) என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வர்.  இந்நிகழ்ச்சி, ரவீந்த்ர பவனில் 2022 மார்ச் 10ம் தேதி காலை 10.30 மணி முதல் நடக்கிறது.

சாகித்திய அகாடமி விருதுகள் மார்ச் 11ம் தேதி மாலை 5 மணிக்கு 24 பேருக்கு வழங்கப்படுகிறது. சாகித்திய அகாடமி தலைவர் டாக்டர். சந்திர சேகர் கம்பர் விருதுகளை வழங்குவார்.

 

மூன்று நாள் தேசிய கருத்தரங்கு , ‘இந்திய சுதந்திர இயக்கத்தில் இலக்கியத்தின் தாக்கம்’ என்ற தலைப்பில் மார்ச் 13ம் தேதி முதல்  மார்ச் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் இருந்து 42 பிரபல அறிஞர்கள் இதில் பங்கேற்று, தங்கள் கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். 

இந்திய மொழிகளில் கடந்த 1947ம் ஆண்டு முதல் கற்பனை மற்றும் அறிவியல் கதை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் மார்ச் 13ம் தேதி மாலை 2.30 மணிக்கு தொடங்குகிறது.

‘‘ஊடகம் மற்றும் இலக்கியம்’’ குறித்த குழு விவாதம் 2022 மார்ச் 14ம் தேதி காலை 10.30 மணியளவில் நடத்தப்படும்.

 வடக்கு மற்றும் வடகிழக்கு எழுத்தாளர்களின் சந்திப்பு நிகழ்ச்சி மார்ச் 15ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. இதே நாளில், ‘‘இலக்கியம் மற்றும் பெண்கள் மேம்பாடு’’ என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தை பிரபல ஆங்கில எழுத்தாளர் திருமிகு மமாங் டாய் தொடங்கி வைக்கிறார்.

சாகித்ய அகாடமியின் புத்தக கண்காட்சி திருவிழாவின், அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்புகளை பார்க்கவும்:

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/file/FOL-2022-card7P5L.pdf

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804402

                                                                                *********************



(Release ID: 1804531) Visitor Counter : 245