வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ‘வடகிழக்கு மகளிர் சக்தி’ நிகழ்ச்சிக்கு வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு

Posted On: 08 MAR 2022 3:49PM by PIB Chennai

மார்ச் 8-ம் தேதியான இன்று ‘சர்வதேச மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திரத்தை நினைவுகூரும் விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, சர்வதேச மகளிர் தினத்தை சமூக ஊடகங்கள் மற்றும் நேரடி செயல்பாடுகளின் மூலம் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் உற்சாகத்துடன் கொண்டாடியது.

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம், வடகிழக்குக்  குழு மற்றும் வடகிழக்குப்  பகுதி சமூக வள மேலாண்மை சங்கம் உள்ளிட்ட நிறுவனங்களைச்  சேர்ந்த மகளிர் பணியாளர்களின் வாழ்த்துச் சுவரொட்டி மற்றும் வாசகங்களுடன் பிரச்சாரம் தொடங்கியது. வடகிழக்குப்  பிராந்திய மேம்பாட்டு அமைச்சகக் குழு மற்றும் இந்திய அரசின் பல்வேறு துறைகளும் புது தில்லி விக்யான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்ட கையெழுத்துப் பிரச்சாரத்தில் பங்கேற்றன.

இன்றைய மகளிர் தினக்  கொண்டாட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக வடகிழக்குப்  பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம், வடகிழக்குக்  குழு, வடகிழக்குப்  பகுதி சமூக வள மேலாண்மை சங்கம் மற்றும் இணைத் துறைகளின் அதிகாரிகளை உள்ளடக்கிய ‘காணொலி நகர சபைக் கூட்டம் நடைபெற்றது. வடகிழக்குக்  குழுச்  செயலாளர் திரு கே மோசஸ் சாலை நிறைவுரையை வழங்கினார். வடகிழக்குப்  பிராந்தியத்தின் வளர்ச்சியை நோக்கிய பெண் குழுக்களின் முயற்சிகள் மற்றும் சாதனைகள் கூட்டத்தில் பாராட்டுப் பெற்றன.

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் சமூக ஊடகப்  பக்கங்களில் ‘வடகிழக்கின் பெண்கள் சக்திக்கு நன்றி என்ற கருப்பொருளுடன் சமூக ஊடகப்  பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. வடகிழக்குப்  பிராந்தியத்தில் உள்ள நமது பெண்கள் சக்தியின் மாபெரும் சாதனைகளைப்  பிரச்சாரம் கொண்டாடியது.

மகளிர் தினத்திற்கான பிரச்சாரம் மார்ச் 4 அன்று அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டியால் வடகிழக்குப்  பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் சமூக ஊடக தளங்களில் அதிகாரப்பூர்வமாகத்  தொடங்கப்பட்டது. மகளிர் தினத்தன்று இணை அமைச்சர் திரு பி எல் வெர்மா வாழ்த்துச்  செய்தி வெளியிட்டிருந்தார். அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கான வாசகம் எழுதும் போட்டியும் நடத்தப்பட்டது.

மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள இணைப்புகளைப்  பார்க்கவும்:

 

https://fb.watch/bCGP78Y5e7/

 

https://fb.watch/bCGQpPBo7Q/

 

https://fb.watch/bCGRG_HxYM/

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803951

**********



(Release ID: 1804115) Visitor Counter : 155