மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
நரேந்திர மோடி அரசு இந்தியாவில் ஸ்டார்ட் அப் மற்றும் மின்னணுப் பொருளாதாரம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விரைவாக வளர்ச்சி அடையச் செய்கிறது: மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
प्रविष्टि तिथि:
07 MAR 2022 2:35PM by PIB Chennai
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் ஐதராபாதில் உள்ள மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்திற்கு இன்று சென்றார். நாட்டின் மின்னணு நடவடிக்கையை துரிதப்படுத்த ஐதராபாதில் இந்திய தரவு மையத்தை நிறுவ மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள மைக்ரோ சாஃப்ட் தரவு மையம் கடந்த ஐந்தாண்டுகளில் 1,69,000 புதிய திறன்மிக்க தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு உட்பட 15 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது. ஊரடங்குக்கு முன்பாக நாள்தோறும் 270 பீட்டா பைட் தரவு நுகர்வு இருந்த நிலையில் ஊரடங்கிற்கு பிறகு 14 சதவீதம் அதிகரித்து சராசரியாக 308 பீட்டா பைட்டாக அதிகரித்துள்ளது. கொவிட் பாதிப்புக் காலத்திற்கு முன்பைவிட தற்போது ஸ்மார்ட் போன் உபயோகிப்பாளர்கள் 16 சதவீத அளவிற்கு அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். பள்ளி கல்லூரிகளில் ஆன்லைன் கல்வி, வீட்டிலிருந்தபடியே வேலை ஆகியவற்றின் மூலம் தரவு நுகர்வு பெருமளவு அதிகரித்துள்ளது.
அப்போது பேசிய திரு ராஜீவ் சந்திரசேகர், இந்தியாவின் பொருளாதாரத்தை ஐந்து ட்ரில்லியன் டாலர் அளவிற்கு அதிகரிக்கும் நோக்கில், இந்தியாவின் மின்னணு பொருளாதாரம் விரிவாக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803551
************************
(रिलीज़ आईडी: 1803711)
आगंतुक पटल : 267