அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஹன்சா-என்ஜி பயிற்சி விமானம் புதுச்சேரியில் கடல் அளவிலான சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது

Posted On: 06 MAR 2022 12:07PM by PIB Chennai

முதன்முதலாக  உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் பயிற்சி விமானமான ஹன்சா-என்ஜி, புதுச்சேரியில் கடந்த மாதம் 19-ம் தேதி முதல் மார்ச் 5-ந்தேதி வரை கடல் அளவிலான சோதனை ஓட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ், பெங்களூருவில் உள்ள சிஎஸ்ஐஆர்- தேசிய ஏரோஸ்பேஸ் ஆய்வகம் இந்த பயிற்சி விமானத்தை வடிவமைத்து, உருவாக்கியுள்ளது.

பிப்ரவரி 19-ம்தேதி இந்த விமானம், 140 கடல்மைல் தூரத்தை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் ஒன்றரை மணி நேரத்தில் பறந்து புதுச்சேரியை அடைந்தது. விமானத்தின் வேகம், பராமரிப்பு தரம், பறக்கும் திறன்களை மதிப்பிடுவதற்காக கடல் அளவிலான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடல் அளவிலான அனைத்து பயிற்சிகளையும், புதுச்சேரியில் 18 மணி நேர பறத்தலையும்  முடித்துக்கொண்டு, மார்ச் 5-ம்தேதி விமானம் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நவீன ரக விமானத்தை இந்திய விமானப்படையின் ஏஎஸ்டிஏ-வைச் சேர்ந்த விங் கமாண்டர் கே.வி. பிரகாஷ், விங் கமாண்டர் திலிப் ரெட்டி ஆகியோர் இயக்கினர்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803305

******



(Release ID: 1803329) Visitor Counter : 304