பாதுகாப்பு அமைச்சகம்

பிரம்மோஸ் ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட நிலத்தாக்குதல் இலக்கை துல்லியமாகத் தாக்கி இந்திய கடற்படை வெற்றிகர சோதனை

Posted On: 05 MAR 2022 7:24PM by PIB Chennai

இந்திய கடற்படை பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட நிலத்தாக்குதல் இலக்கை துல்லியமாகத் தாக்கி இன்று வெற்றிகரமான சோதனையை மேற்கொண்டது. நாசகார  கப்பலான(Destroyer) ஐஎன்எஸ் சென்னையில் இருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஏவுகணை மிகத் துல்லியமாக இலக்கை தாக்கியது.

பிரம்மோஸ் ஏவுகணையும், அதனை ஏவிய ஐஎன்எஸ் சென்னை கப்பலும் உள்நாட்டிலேயே நவீன ஆற்றலுடன் தயாரிக்கப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பாகும்.  தற்சார்பு இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் ஆகிய இந்தியாவின் முன்முயற்சிகளில் இந்திய கடற்படையின் பங்களிப்பாக இது அமைந்துள்ளது.

இந்த சோதனை மூலம், இந்திய கடற்படை, கடலில் இருந்து வெகு தொலைவில் உள்ள நிலப்பரப்பை தேவைப்படும் இடத்திலும் நேரத்திலும் குறிவைத்து துல்லியமாகத் தாக்கும் திறனைப் பெற்றிருப்பது சாதனையாக  கருதப்படுகிறது.

                                                                                                ******************



(Release ID: 1803221) Visitor Counter : 187


Read this release in: English , Urdu , Marathi , Hindi , Odia