பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பல்முனை கடற்படை பயிற்சியான மிலன் 22 நிறைவடைந்தது

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAR 2022 3:20PM by PIB Chennai

26 கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி கப்பல் மற்றும்  21 விமானங்கள் கலந்துகொண்ட மிலன் கடற்படை பயிற்சியின் 11-வது பதிப்பு 2022 மார்ச் 4 அன்று நிறைவுற்றது.

 

கடற்படை செயல்பாடுகளின் செயல்திறன், இணைந்து செயல்படுதல், பரஸ்பர புரிதல் மற்றும் நட்புகடற்படைகள் உடனான ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பல்வேறு கடினமான மற்றும் மேம்பட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

அமெரிக்க மற்றும் இந்திய போர் விமானங்கள் கலந்துகொண்ட விமான எதிர்ப்பு போர் பயிற்சிகள் முதல் இரண்டு நாட்களில் கடலில் மேற்கொள்ளப்பட்டன. ஹெலிகாப்டர், கப்பல் மற்றும் பீரங்கி பயிற்சிகளும் நடைபெற்றன.

 

கிழக்கு கடற்படைப் பிரிவின் தளபதி சந்தீப் பல்லா நிறைவு நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றார்.பயிற்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக,   மிலன் 22-ல் கலந்து கொண்ட நாடுகளின் தலைமை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803162

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1803179) வருகையாளர் எண்ணிக்கை : 327
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali