குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

பிளாஸ்டிக்ஸ் மறுசுழற்சி மற்றும் கழிவு மேலாண்மை குறித்த மாபெரும் உச்சி மாநாடு: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் நடத்தியது

Posted On: 04 MAR 2022 1:15PM by PIB Chennai

பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் கழிவு மேலாண்மை குறித்த சர்வதேச உச்சி மாநாட்டை  மத்திய குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணையமைச்சர் திரு. பானு பிரதாப் சிங் வர்மா இன்று தொடங்கி வைத்தார்.  இந்த மாநாடு, அகில இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்துடன் இணைந்து புதுதில்லியில் மார்ச் 4ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

சம்பவ்’ மற்றும் ‘ஸ்வவ்லம்பன்’ என்ற இரண்டு சிறப்பு நடவடிக்கைகளையும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் தொடங்கியது. நாடு முழுவதும் முன்னேற்றம் அடைய விரும்பும் மாவட்டங்களில் இளைஞர்கள் இடையே தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்த சர்வதேச உச்சிமாநாடு, ‘‘உங்கள் கழிவு, அதை சரியான வழியில் மறுசுழற்சி செய்வது எப்படி என்பதை அறியுங்கள்’’ என்பதை  வலியுறுத்துகிறது. புதுதில்லியில் நடைபெறும் இந்த 2 நாள் மாநாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் பிளாஸ்டிக்கில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவரிக்கின்றனர். இந்த உச்சிமாநாட்டில் நேரடியாக 350க்கும் மேற்பட்டோரும், காணொலி மூலமாக 1000க்கும் மேற்பட்ட குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவினரும் பங்கேற்கவுள்ளனர். அதோடு, பல நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் காணொலி மூலம் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்பர்.

துவக்க நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் திரு. பானு பிரதாப் சிங் வர்மா, ‘‘   பிளாஸ்டிக்கின் தாக்கம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சாத்தியமான தீர்வு குறித்து ஆலோசிக்க, இந்த நிகழ்ச்சி சிறந்த தளம் மற்றும் தூய்மை இந்தியா திட்ட  தொலைநோக்குடன் பிளாஸ்டிக் , மறுசுழற்சி தொழில்துறையில் புதிய வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றார்.  

ஐகானிக் வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் கீழ், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் ‘சம்பவ்’ என்ற தேசியளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை, நாடு முழுவதும் 1,300 கல்லூரிகளில் இணையகருத்தரங்கு மூலம் நடத்துகிறது.

மேலும் முன்னேற்றம் அடைய விரும்பும் 46 மாவட்டங்களில், ‘ஸ்வவ்லம்பன்’ என்ற பெயரில் தெரு நாடகங்களையும் நடத்துகிறது. இதன் மூலம் இளைஞர்கள் இடையே தொழில்முனைவு  ஊக்குவிக்கப்படும்.  குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இந்த மாநாட்டில் பேசிய குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளர் திரு. பி.பி.ஸ்வெயின், ‘‘ பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்வது, புத்தாக்கம் மற்றும் இத்துறையின்  நிலைத்தன்மையில் முக்கியமான நடவடிக்கை. மத்திய அரசின் மேக் இன் இந்தியா கொள்கையில், பிளாஸ்டிக் தொழில்துறை முக்கிய பங்காற்றும்’’ என்றார். 

பிளாஸ்டிக்ஸ் மற்றும் மறுசுழுற்சியின் பங்கு குறித்து வலியுறுத்திய அகில இந்திய பிளாஸ்டிக்ஸ் உற்பத்தியாளர் சங்க தலைவர் திரு. கிஷோர் பி. சம்பத், ‘‘ பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழுற்சி தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அகில இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்துடன் இணைந்து பல காணொலி நிகழ்ச்சிகளை நடத்துகிறது’’ என்றார்.

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802879

                                                                                ************************

 



(Release ID: 1803010) Visitor Counter : 320