மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, 2022 மார்ச் 5 அன்று ‘கடல் பயணத்தை’ தொடங்கிவைப்பார்

Posted On: 03 MAR 2022 4:54PM by PIB Chennai

மத்திய மீன்வளத்துறை ஏற்பாடு செய்துள்ள கடல் பயணத்தில்  தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், குஜராத் மாநில மீன்வளத்துறை, இந்திய கடலோரக் காவல்படை, இந்திய மீன்வள ஆய்வு அமைப்பு, குஜராத் கடல்சார் வாரியம் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். 

கடலோரம் உள்ள  மீனவ சமுதாயத்தின்  பிரச்சனைகளைத்  தெரிந்து கொள்ளும் முயற்சியாகவும், சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின்  பகுதியாகவும் இந்தப் பயணம் குஜராத்தில் உள்ள  ஷ்யாம் ஜி கிருஷ்ணவர்மா நினைவகம் அருகே, மாண்ட்வீயிலிருந்து 2022 மார்ச் 5 அன்று தொடங்கும். இதே போன்ற பயணங்கள் குஜராத்தின் இதர மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் நடத்தப்பட உள்ளன.

மார்ச் 5, பயணத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்   மாநில மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவப் பிரதிநிதிகள், மீன்வளர்ப்போர் மற்றும் அறிவியலாளர்கள் கலந்துகொள்வார்கள். இந்தப் பயணம் 2022 மார்ச் 6 அன்று போர்பந்தரில் நிறைவடையும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802666

*******

 


(Release ID: 1802737) Visitor Counter : 367


Read this release in: English , Urdu , Hindi , Gujarati