அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தனித்துவமான பெரும்பாலும் இந்தியாவின் முதலாவதான நவீன புதுமைத் தொழிலாக பகல்நேர ஒளி சேகரிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்த அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
Posted On:
03 MAR 2022 5:23PM by PIB Chennai
கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும், கட்டடத்தின் வெப்பத்திறனை மேம்படுத்தவும் தனித்துவமான பெரும்பாலும் இந்தியாவின் முதலாவதான நவீன புதுமைத் தொழிலாக பகல்நேர ஒளி சேகரிப்பு தொழில்நுட்பத்தைப் பிரபலப்படுத்த அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக அத்துறைக்கான இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
இதற்காக ஐதராபாதைச் சேர்ந்த “ஸ்கைஷேட் டேலைட்ஸ் பிரைவேட் லிமிடெட்” நிறுவனம் டாக்டர் ஜிதேந்திர சிங் முன்னிலையில், அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சட்டப்பூர்வ அமைப்பான தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
24 மணிநேர அடிப்படையில் அடித்தள ஒளிக்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான திட்டச்செலவு ரூ.10 கோடியில், ரூ.5 கோடியை இந்த வாரியம் தனியார் நிறுவனத்துக்கு வழங்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
பகல்நேர வெளிச்சம் என்பது இயற்கையான சூரிய ஒளியிலிருந்து அறைக்குள் வருவதாகும். இந்த சூரியசக்தி ஒளிக்கற்றை 45 சதவீத எரிசக்தியைக் கொண்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு 9 முதல் 11 மணி நேரம் வரை ஒளியை சேகரிக்க முடியும். இந்தத் தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பமாகும். பொருளாதார ரீதியில் லாபகரமானது. நிறுவுவது எளிது. பராமரிப்புக்கு குறைந்த செலவே ஆகும். நீடித்து உழைக்கும் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802672
***************
(Release ID: 1802729)
Visitor Counter : 247