வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2013-14-ம் ஆண்டுக்கு பிறகு மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 88% உயர்ந்துள்ளது

Posted On: 28 FEB 2022 2:42PM by PIB Chennai

2013-14-ல் 6600 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி 2021-22-ல் சுமார் 88 சதவீதம் அதிகரித்து 12,400 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகியுள்ளது. செல்பேசிகள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் (மடிக்கணினிகள், கையடக்கக் கணினிகள்) வாடிக்கையாளர் மின்னணு சாதனங்கள் (தொலைக்காட்சி, ஆடியோ), தொழில்துறை மின்னணு சாதனங்கள், தானியங்கி மின்னணு சாதனங்கள் ஆகியவை இந்த துறையின் முக்கியமான ஏற்றுமதி பொருட்களாகும்.

 ஏற்றுமதியில் தொடர்ச்சியான வளர்ச்சி இந்தியாவில் காணப்படுகிறது. 2021 ஜனவரியில் 27.54 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் வணிகப் பொருட்கள் ஏற்றுமதி 2022 ஜனவரியில் 23.69 சதவீதம் அதிகரித்து 34.06 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 2020 ஜனவரியில் சாதனை அளவாக 31.75 சதவீதம் அதிகரித்து 25.85 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

இந்தியாவின் வணிகப் பொருட்கள் ஏற்றுமதி 2019-20-ல் (ஏப்ரல்-ஜனவரி) 27.07 சதவீதம் அதிகரித்து 264.13 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2020-21-ல் (ஏப்ரல்-ஜனவரி) 228.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், 2021-22-ல் (ஏப்ரல்-ஜனவரி) 46.53 சதவீதம் அதிகரித்து, 335.44 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.

 ஏற்றுமதியை ஊக்கப்படுத்த பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. ஏற்றுமதிப் பிரிவு சந்திக்கும் தடைகள், சிரமங்கள் ஆகியவற்றை நீக்கி உதவி செய்ய ஏற்றுமதி கண்காணிப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. உரிமம் வழங்குதல், ஏற்றுமதியாளர்களின் குறைகளை கேட்டறிதல் ஆகியவற்றுக்கு தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான தளத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1801781

***************


(Release ID: 1801859) Visitor Counter : 282