சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மூத்த குடிமக்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான முகாமை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைக்கவுள்ளார்
Posted On:
26 FEB 2022 3:30PM by PIB Chennai
இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் தேசிய மூத்த குடிமக்கள் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான முகாமை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைக்கவுள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள அகமது நகரில் 2022 பிப்ரவரி 28 அன்று காலை 11 மணிக்கு ஆலிம்கோ மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுஜய் விக்கே பட்டீல், உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆலிம்கோவால் நடத்தப்பட்ட முகாம்களில் 37401 பயனாளிகள் கண்டறியப்பட்டனர். ரூபாய் 37.59 கோடி மதிப்பிலான 320833 உதவி உபகரணங்கள் அகமதுநகர் மாவட்டத்தில் வழங்கப்பட உள்ளன. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சி நடைபெறும். கைத்தடி, கண்ணாடிகள், செவித்திறன் உபகரணங்கள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1801340
***********
(Release ID: 1801433)
Visitor Counter : 208