குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
சிந்துதுர்கில் ரூ.200 கோடி செலவில் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்
Posted On:
25 FEB 2022 3:57PM by PIB Chennai
மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்கில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் எம்எஸ்எம்இ-தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும் என மத்திய குறு-சிறு & நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு நாராயண் ரானே அறிவித்துள்ளார். இந்த மையத்தில், அதிநவீன தொழில்நுட்பம், தொழில்துறையினருக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் தொடக்க கால பயிற்சிகள், குறிப்பாக குறு-சிறு & நடுத்தர தொழில்துறையினருக்கு இந்த சேவைகள் வழங்கப்படும்.
இதன்மூலம், குறு-சிறு & நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது சுற்று வட்டாரத்தில் உள்ள பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். சிந்துதுர்கில் தமது அமைச்சகம் சார்பில் நடைபெறும் இரண்டு நாள் குறு-சிறு & நடுத்தர தொழில் துறை மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர், இதனைத் தெரிவித்தார்.
இதுபோன்ற மாநாடுகள் தொழில் முனைவோர், கொள்கை வகுப்போர் மற்றும் சம்பந்தப்பட்ட பிற முக்கியத்துறையினர் வெளிப்படையான முறையில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதோடு, புதுமையான சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளவும், பரஸ்பர வர்த்தக வாய்ப்புகளை ஆராய உதவிகரமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1801096
***************
(Release ID: 1801171)
Visitor Counter : 264