பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடற்படை மற்றும் எச்ஏஎல் இடையே பரஸ்பர விருப்ப ஒப்பந்தம் கையெழுத்து.

Posted On: 25 FEB 2022 1:55PM by PIB Chennai

கொச்சியில் உள்ள விமானவியல் தொழில்நுட்பத்திற்கான கடற்படை நிறுவனம் மற்றும் பெங்களூருவில் உள்ள எச்ஏஎல் மேலாண்மை அகாடமி ஆகியவற்றுக்கு இடையே ஆசிரியர்களை பரிமாற்றம் செய்து கொள்வதற்கான பரஸ்பர விருப்ப ஒப்பந்தத்தில் இந்திய கடற்படை மற்றும் எச்ஏஎல் 2022 பிப்ரவரி 24 அன்று கையெழுத்திட்டன. 

விமானவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் பராமரிப்பு, பழுது பார்த்தல்,  புனரமைப்பு, மேலாண்மை ஆகியவற்றில் குறுகிய கால மற்றும் நீண்ட கால படிப்புகள், கௌரவ உரைகள், பயிலரங்குகள் மற்றும் மாநாடுகள் உள்ளிட்டவற்றை நடத்துவதன் மூலம் பயிற்சியாளர்களின் திறன்களை வளர்ப்பதற்கு இந்த கூட்டு வழிவகுக்கும். 

கடற்படையின் உதவி தளபதி (விமான பொருட்கள்) திரு. தீபக் பன்சல் மற்றும் எச்ஏஎல் மேலாண்மை அகாடமி பொது மேலாளர் மற்றும் தலைவர் டாக்டர் ஜி. ஸ்ரீகாந்த் சர்மா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கடற்படை உதவி தளபதி திரு. ரவ்நீத் சிங் மற்றும் எச்ஏஎல் இயக்குநர் (செயல்பாடுகள்) திரு. எம் .எஸ். வேல்பாரி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

மூன்றாவது ஐஎன்-எச்ஏஎல் தலைமை கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் இரு நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பெரிதும் பயனடைவார்கள்.  

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1801047 

**********


(Release ID: 1801113) Visitor Counter : 214