இந்திய போட்டிகள் ஆணையம்
ஐஎஸ்எம்டி லிமிடெட் பங்குகளை கிர்லோஸ்கர் ஃபெரஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் கையகப்படுத்துவதற்கு இந்திய போட்டியியல் ஆணையம் ஒப்புதல்
प्रविष्टि तिथि:
24 FEB 2022 5:39PM by PIB Chennai
ஐஎஸ்எம்டி லிமிடெட் நிறுவனப் பங்குகளை கிர்லோஸ்கர் ஃபெரஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் கையகப்படுத்தும் கூட்டுத் திட்டத்திற்கு இந்திய போட்டியியல் ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
கிர்லோஸ்கர் ஃபெரஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்பது பட்டியலிடப்பட்ட பொது நிறுவனமாகும். கிர்லோஸ்கர் குழுமத்தின் முதன்மை நிறுவனம் இதுவாகும். ஆட்டோமொபைல், டிராக்டர் மற்றும் டீசல் என்ஜின் தொழில்களுக்குத் தேவையான பல்வேறு வகையான இரும்பு தொடர்பான பொருட்களின் வர்த்தகத்தில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
ஐஎஸ்எம்டி லிமிடெட் என்பது பங்குகளால் வரையறுக்கப்பட்ட பட்டியலிடப்பட்ட பொது நிறுவனம் ஆகும். எஃகு, குழாய்கள் மற்றும் பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலில் இது ஈடுபட்டுள்ளது.
பங்கு கையகப்படுத்தல் தொடர்பான இந்தியப் போட்டியியல் ஆணையத்தின் விரிவான உத்தரவு விரைவில் வெளியாகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800829
*******
(रिलीज़ आईडी: 1800897)
आगंतुक पटल : 171