ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
தொழில்துறை மற்றும் ஆராய்ச்சித்துறை ஒருங்கிணைந்து நடத்தும் “தொழில்துறை இணைப்பு 2022” என்ற கருத்தரங்கை டாக்டர் மன்சுக் மாண்டவியா நாளை தொடங்கிவைக்கிறார்
प्रविष्टि तिथि:
24 FEB 2022 4:21PM by PIB Chennai
பெட்ரோ ரசாயனப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மத்திய கல்விக்கழகம், இந்திய தொழில்வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து மத்திய ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனத்துறையும், ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகமும் “தொழில்துறை இணைப்பு 2022” என்ற கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்தக் கருத்தரங்கு புதுதில்லியில் 2022 பிப்ரவரி 25 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இந்தக் கருத்தரங்கை ரசாயனம் மற்றும் உரங்கள் துறை, புதிய, புதுப்பிக்கவல்ல எரிசக்தித்துறை இணையமைச்சர் திரு பக்வந்த் குபா முன்னிலையில் தொடங்கிவைப்பார். இதில் மூத்த அதிகாரிகள், தொழில்துறை அதிபர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800790
***************
(रिलीज़ आईडी: 1800806)
आगंतुक पटल : 213