சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் திருமிகு. சயீத் ஷாஹேசாதி தலைமையில் ஆலோசனை கூட்டம்
प्रविष्टि तिथि:
23 FEB 2022 3:40PM by PIB Chennai
தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக திருமிகு. சயீத் ஷாஹேசாதியை, மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு. முக்தர் அப்பாஸ் நக்வி கடந்த 2ஆம் தேதி நியமித்தார். அதன்பின் திருமிகு. சயீத் ஷாஹேசாதி தலைமையில் தேசிய சிறுபான்மை ஆணையத்தின் முழு அளவிலான கூட்டம், புதுதில்லியில் இன்று நடந்தது. இந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள புத்த. ஜெயின,மற்றும் பார்சி இனத்தை சேர்ந்தவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தொடர்பான பல விஷயங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்கான விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
2021-22ம் ஆண்டில், இதுவரை சிறுபான்மையினர் ஆணையம் 1850 புகார் மனுக்களை பெற்றுள்ளது. இதில் 1066 மனுக்கள் முடித்து வைக்கப்பட்டன. 514 புகார்களில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கைகள் கேட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 270 புகார்கள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. தீர்க்கப்படாத பிரச்னைகள் குறித்து ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பரிந்துரைக்கும்.
******
(रिलीज़ आईडी: 1800625)
आगंतुक पटल : 2234