பாதுகாப்பு அமைச்சகம்
பாராசூட் படைப்பிரிவின் அலகுகளுக்கு குடியரசுத் தலைவரின் கொடிகளை ராணுவத் தளபதி வழங்கினார்
प्रविष्टि तिथि:
23 FEB 2022 3:21PM by PIB Chennai
பெங்களூரில் உள்ள பாராசூட் படைப்பிரிவு பயிற்சி மையத்தில் 2022 பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற எழுச்சிமிக்க கொடி வழங்கும் அணிவகுப்பு நிகழ்ச்சியின்போது 11 பாராசூட் (சிறப்புப் படைகள்), 21 பாராசூட் (சிறப்புப் படைகள்), 23 பாராசூட் மற்றும் 29 பாராசூட் என்ற பாராசூட் படைப்பிரிவின் 4 அணிகளுக்கு கவுரவம் மிக்க குடியரசுத் தலைவரின் கொடிகளை ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே வழங்கினார்.
இந்தப் படைப்பிரிவு காசா, கொரியா, பங்களாதேஷ், இலங்கை, மாலத்தீவுகள், கட்ச் தீவு, சியாச்சின், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் போன்ற பல வகையான தளங்களிலும் மணிப்பூர், நாகாலாந்து, அசாம் உள்ளிட்ட கிழக்குப் பகுதியிலும் இந்தப் படைப்பிரிவு ஏராளமான பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. சுதந்திரத்திற்குப் பின் இந்தப் படையின் பிரிவுகள் 32 முறை ராணுவத் தளபதியின் பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றுள்ளன. இந்தப் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் தீரச்செயல்கள் மற்றும் அசாதாரணமான துணிச்சல்மிக்க பணிகளுக்கு 08 அசோக சக்கரா, 14 மகாவீர் சக்கரா, 22 கீர்த்தி சக்கரா, 63 வீர் சக்கரா, 116 சௌரிய சக்கரா விருதுகளையும், 601 சேனா பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.
பாராசூட் படைப்பிரிவின் அணிவகுப்பை பார்வையிட்ட ராணுவத் தளபதி இந்தப் படையின் தீரம், தியாகம், பாரம்பரியங்கள் ஆகியவற்றைப் பாராட்டினார். புதிதாக உருவாக்கப்பட்ட அலகுகள் குறுகிய காலத்தில் சிறப்பாக செயல்பட்டிருப்பதையும் அவர் பாராட்டினார். பெருமையோடு தேசத்திற்கு சேவை புரிந்துள்ள அனைத்து வீரர்களுக்கும் அவர் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
***************
(रिलीज़ आईडी: 1800558)
आगंतुक पटल : 229