ஊரக வளர்ச்சி அமைச்சகம்
பிரதமரின் கிராம வீட்டு வசதித் திட்டத்தின் விவரங்களை இணையதளத்தில் அறியலாம் : அதற்கான கண்காணிப்புப் பலகையை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங்
प्रविष्टि तिथि:
22 FEB 2022 6:55PM by PIB Chennai
பிரதமரின் கிராம வீட்டு வசதித் திட்ட அமலாக்கத்தை இணையளம் மூலம் கண்காணிக்கும் பலகை வசதியை மத்திய ஊரக மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் தொடங்கி வைத்தார். இந்த வசதியை அனைத்து தரப்பினரும் பார்த்து, பிரதமரின் வீட்டு வசதி திட்ட நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியும். இந்த கண்காணிப்புப் பலகை வசதியை இணையளத்தில் மக்கள் பார்க்கும்படி மாற்ற வேண்டும் என அதிகாரிகளை, மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இந்தப் பலகை, வீட்டு வசதி திட்ட அமலாக்கத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் என இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங் கூறினார். இந்த இணையளத்தின் இணைப்பு நாட்டில் அனைத்து கிராமத் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களைச் சென்றடைய வேணடும் எனவும், அப்போதுதான் அவர்களால் இத்திட்டத்தைக் கண்காணிக்க முடியும் எனவும் அமைச்சர் கூறினார்.
இந்த கண்காணிப்புப் பலகையை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை, மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என ஊரக மேம்பாட்டுத்துறை செயலாளரை மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
வட்டாரப் பிரதிநிதிகளுக்கு இந்தப் பலகைக்கான இணைப்பை வழங்கும் பொறுப்பை வட்டார அதிகாரியிடம் வழங்க வேண்டும் என அமைச்சர் கூறினார். இந்த இணையளத்தில் குறைகளைத் தெரிவிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தேசியத் தகவல் ஆணையத்தை அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800355
******************
(रिलीज़ आईडी: 1800406)
आगंतुक पटल : 322