கலாசாரத்துறை அமைச்சகம்
‘வந்தே பாரதம்’ சிக்னேச்சர் டியூன் வெளியிடப்பட்டது
Posted On:
22 FEB 2022 7:03PM by PIB Chennai
ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் கீழ் கொண்டாட்டத்தில், "ஏகம் பாரதம்" என்று பெயரிடப்பட்ட சர்வதேச தாய்மொழி தின நிகழ்வுடன் கலாச்சார மாலை நிகழ்ச்சியும் 22 பிப்ரவரி 2022 அன்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய காலை மையத்தில் கலாச்சார அமைச்சகத்தால் நடத்தப்பட்டது. கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ் மற்றும் ஆஸ்கார் போட்டியாளர் பிக்ரம் கோஷ் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட "வந்தே பாரதம்" கான கையெழுத்து இசை, கலாசாரம் மற்றும் வெளிவிவகார இணை அமைச்சர் திருமதி. மீனகாசி லேகியினால் வெளியிடப்பட்டது . தொடர்ந்து இந்தக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
‘வந்தே பாரதம்’ பாடல் வந்தே பாரதம் நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்டது, 2022 தேசிய குடியரசு தின நிகழ்விற்காக புது தில்லி ராஜ்பாத்தில் வழங்கப்பட்டது.
கலாச்சாரத் துறைச் செயலாளர் ஸ்ரீ கோவிந்த் மோகன், கிராமி விருது பெற்ற ரிக்கி கேஜ் மற்றும் தபேலா மேஸ்ட்ரோ பிக்ரம் கோஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வந்தே பாரதம் பாடலின் இசையமைப்பாளர்களான ரிக்கி கேஜ் மற்றும் பிக்ரம் கோஷ் ஆகியோரின் கண்கவர் நேரடி நிகழ்ச்சிகள் அனைவரையும் மயக்கத்தில் ஆழ்த்தியது.
இந்நிகழ்வில் உரையாற்றிய திருமதி மீனாட்சி லேகி காலங்காலமாக நமது கலாச்சாரத்தைப் பாதுகாக்க உதவிய இந்தியக் கலாச்சாரத்தின் மகத்தான குருக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நமது கலாச்சாரம் நமது பாரம்பரியம், அதை முன்னெடுத்துச் செல்ல இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று ஸ்ரீமதி மீனகாஷி லேகி கூறினார்.
வந்தே பாரதம் பாடலின் செழுமையைப் பாராட்டிய ஸ்ரீமதி மீனகாசி லேகி, நாட்டு மக்களை சுதந்திரத்திற்காகப் போராடத் தூண்டிய வந்தே மாதரத்தின் உணர்வை இது நமக்கு நினைவூட்டுகிறது என்றார். நமது முன்னோர்கள் சுதந்திர இந்தியாவை கனவு கண்டது போல், வரும் 25 ஆண்டுகளில் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று கனவு காண வேண்டும். சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாடுகிறோம் என்று அமைச்சர் கூறினார்.
நிகழ்வில் உரையாற்றிய ஸ்ரீ கோவிந்த் மோகன், வந்தே பாரதம், நிருத்ய உத்சவ் வெற்றியானது அந்த 480 இளம் கலைஞர்கள் மற்றும் 4 இசையமைப்பாளர்களைச் சாரும் என்கிறார்.
ரிக்கி கேஜ் மற்றும் பிக்ரம் கோஷ் ஆகிய இரு இசைக்கலைஞர்களும், இந்திய மரபுகளை அடிப்படையாகக் கொண்ட வந்தே பாரதத்திற்கு இசையமைத்திருப்பது தங்களுக்கு கிடைத்த பெருமை என்று கூறினார்கள்.
2022 குடியரசு தின நிகழ்வின் போது முன்னுதாரணமான முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சகம் சிறப்பு கோப்பையை கலாச்சார அமைச்சகத்திடம் ஒப்படைத்தது.
மினி உணவுத் திருவிழாவில் நாடு முழுவதிலும் இருந்து சுவையான உணவுகளுடன் அழகிய மாலை நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
*********************
(Release ID: 1800383)
Visitor Counter : 247