அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இளம் கணிதவியலாளருக்கான ராமானுஜன் பரிசினைப் பேராசிரியர் நீனா குப்தா பெற்றார்
प्रविष्टि तिथि:
22 FEB 2022 6:54PM by PIB Chennai
இளம் கணிதவியலாளருக்கான 2021-ம் ஆண்டுக்கான ராமானுஜன் பரிசினைப் பேராசிரியர் நீனா குப்தா பெற்றார். கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளிவிவர இயல், கல்வி நிறுவனத்தின் கணிதவியலாளரான இவருக்கு 2022 பிப்ரவரி 22 அன்று இணையவழியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தப் பரிசு வழங்கப்பட்டது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் சர்வதேச ஒத்துழைப்புப் பிரிவின் தலைவரான திரு சஞ்சீவ் வர்ஷினி, செயலாளர் மற்றும் துறை சார்பில் டாக்டர் நீனா குப்தாவுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் பெண் ஆய்வாளர் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பது உலகம் முழுவதும் உள்ள மற்ற பெண் ஆய்வார்கள் கணிதத்தைத் தங்களின் பணியாக ஏற்பதற்கு ஊக்கமளிக்கும் என்றார்.
கோட்பாட்டு இயற்பியலுக்கான சர்வதேச மையம், சர்வதேச கணித சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத்துறை நிதியுதவியுடன் வளர்ந்து வரும் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
வளர்ந்து வரும் நாட்டில் சிறப்புமிக்க ஆய்வை நடத்திய 45 வயதுக்கும் குறைவாக உள்ள இளம் கணிதவியலாளருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜன் நினைவாக இது வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800354
------
(रिलीज़ आईडी: 1800371)
आगंतुक पटल : 290