நிதி அமைச்சகம்

நிதி மற்றும் மூலதன சந்தைகளின் தலைவர்களுடன் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் உரையாடல்

Posted On: 21 FEB 2022 5:46PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் நிதி மற்றும் மூலதன சந்தைகளின் தலைவர்களுடன் மும்பையில் இன்று கலந்துரையாடினார். துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராயுமாறு தொழில்துறை தலைவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

பெருந்தொற்று காலங்களில் கூட நிதி சந்தைகள் வெளிப்படுத்திய உறுதி குறித்து நிதியமைச்சர் தனது தொடக்க உரையில் திருப்தி தெரிவித்தார்.

செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மைக்காக பாடுபட வேண்டும் என்று சந்தைப் பங்கேற்பாளர்களை திருமதி. நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு நிதி சந்தையில் நம்பிக்கை முக்கியமானது என்று நிதி அமைச்சர் வலியுறுத்தினார்.  நிறுவனத்தைக் கட்டியெழுப்புவதிலும் நிதி சந்தையை வலுவாகவும், முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாகவும் ஆக்குவதிலும் சந்தைப் பங்கேற்பாளர்களின் முக்கியப் பங்கை திருமதி. நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார்.

முதலீட்டாளர் விழிப்புணர்வு, கேஒய்சி விதிமுறைகள், பரஸ்பர நிதி ஊடுருவல், பெருநிறுவன பத்திரங்களை ஆழப்படுத்துதல், கமாடிட்டி டிரைவேடிவ்கள் மற்றும் சந்தை அமைப்பின் செயல்திறன் தொடர்பான பல்வேறு யோசனைகள் மற்றும் ஆலோசனைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன.

பங்கு சந்தைகள், தீர்வு நிறுவனங்கள், சேமிப்பகங்கள், பரஸ்பர நிதித் தொழில், பங்குத் தரகு நிறுவனங்கள், வணிக வங்கியாளர்கள் மற்றும் கடன் தர நிர்ணய முகமைகளின் செயல்பாட்டுத் தலைவர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800076

                           ********************

 

 



(Release ID: 1800139) Visitor Counter : 128