பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடற்படை கப்பல்களின் அணிவகுப்பை, குடியரசுத் தலைவர் பார்வையிடும் நிகழ்ச்சி: ஏற்பாடுகள் குறித்து கடற்படை தளபதி ஆய்வு

प्रविष्टि तिथि: 20 FEB 2022 5:56PM by PIB Chennai

கடற்படை கப்பல்களின் அணிவகுப்பை, குடியரசுத் தலைவர் பார்வையிடும் நிகழ்ச்சி விசாகப்பட்டினத்தில் நாளை (பிப்ரவரி 21) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் விசாகப்பட்டினத்தில் இன்று ஆய்வு செய்தார்.

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, விசாகப்பட்டினத்தில் நடத்தப்படும் கடற்படை கப்பல்களின் அணிவகுப்பை  குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த்  நாளை (பிப்ரவரி 21) பார்வையிகிறார்.

இதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, கடற்படை உயர் அதிகாரிகளுடன்கடற்படை தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் விசாகப்பட்டினத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். 

இந்த அணிவகுப்பில் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையின் 60க்கும்  மேற்பட்ட  கப்பல்கள், நீர்மூழ்கிகப்பல்கள்,  55 விமானங்கள் பங்கேற்கின்றன.

அந்தமான் மற்றும் நிகோபாரில் உள்ள கடற்படைக் கட்டுப்பாட்டு மையத்தின் போர்க்கப்பல்களும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றன. போர்கப்பல்களின் அணிவகுப்பை, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலில் சென்று பார்வையிடுவார். 44  போர்க்கப்பல்கள் 4 வரிசையில், அணிவகுத்து நிறுத்தப்பட்டிருப்பதை, ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலில் பயணம் செய்தபடி குடியரசுத் தலைவர் பார்வையிடுவார். அப்போது அந்தந்த கப்பல்களின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் அணிவகுத்து நின்று, குடியரசுத் தலைவருக்கு மரியாதை செலுத்துவர்.

இந்த அணிவகுப்பில் கடற்படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட  போர்க்கப்பல் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம், ஐஎன்எஸ் வேலா என்ற நீர்மூழ்கி கப்பல் ஆகியவையும் இடம் பெறுகின்றன. இது தவிர கடற்படையின்  ஐஎன்எஸ் சென்னை, தில்லி, தெக் மற்றும் 3 சிவாலிக் ரக போர்கப்பல்கள், 3 கமோர்தா வகை போர்க்கப்பல்கள், கடலோரக் காவல்படைக் கப்பல்கள், இந்தியக் கப்பல் கழகக் கப்பல்களும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றன.

கடற்படையின் சேத்தரக், ஷீ கிங், காமோவ் ரக ஹெலிகாப்டர்கள்டார்னியர், ஐஎல்-38எஸ்டி, பி81, ஹாக்ஸ் மற்றும் மிக்29-கே ரக விமானங்களும் இந்த விழாவில் அணிவகுத்துச் செல்லும்.

இந்த அணிவகுப்பில் பங்கேற்கும் 60 கப்பல்களில், 47 கப்பல்கள், இந்தியாவில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டவை.  எனவே  இந்த அணிவகுப்பு, தற்சார்பு இந்தியாவின் திறனை வெளிப்படுத்துகிறது. 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799853


(रिलीज़ आईडी: 1799890) आगंतुक पटल : 396
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi