தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில்(இபிஎப்ஓ) கடந்த டிசம்பர் மாதம் 14.60 லட்சம் பேர் சேர்ப்பு.
Posted On:
20 FEB 2022 5:04PM by PIB Chennai
தற்காலிக ஊதிய தரவுப் பட்டியலை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 14.60 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் சேர்ந்தவர்களை விட 2.06 லட்சம் அதிகம். கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் சேர்ந்த சந்தாதார்களின் எண்ணிக்கை, கடந்த நவம்பர் மாதத்தில் சேர்ந்தவர்களை விட 19.98 சதவீதம் அதிகம்.
மொத்தம் இணைந்த 14.50 லட்சம் சந்தாதாரர்களில், 9.11 லட்சம் பேர் புதிய உறுப்பினர்கள். 5.49 லட்சம் பேர், பணி மாறுதல் காரணமாக வெளியேறி மீண்டும் இணைந்தவர்கள். மேலும், இபிஎப்ஓ அமைப்பில் இருந்து உறுப்பினர்கள் வெளியேறுவது கடந்த 2021ம் ஆண்டு ஜூலை முதல் குறைந்து வருகிறது.
புதிதாக இணைந்தவர்களில் 22 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகளவில் உள்ளனர். இந்த வயதுப் பிரிவில் 3.87 லட்சம் பேர், கடந்த டிசம்பர் மாதத்தில் இணைந்துள்ளனர். 18 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களில் சுமார் 2.97 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிகளவில், தோராயமாக 8.97 லட்சம் சந்தாதாரர்கள் கடந்த மாதம் இணைந்துள்ளனர். இவர்கள் புதிதாக சேர்ந்தவர்களில் 61.44 சதவீதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799842
(Release ID: 1799866)
Visitor Counter : 303