விவசாயத்துறை அமைச்சகம்
விவசாய உற்பத்தி அமைப்புகள் இந்தியாவை உலகின் சிறுதானிய மையமாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றும்
प्रविष्टि तिथि:
19 FEB 2022 6:32PM by PIB Chennai
உணவு,வேளாண்மை மற்றும் வாழ்வாதாரம்’ என்னும் இருவார நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, துபாய் எக்ஸ்போ 2020-ல் இந்திய அரங்கில், ‘ இந்தியா; சிறுதானிய உற்பத்தி மற்றும் மதிப்பு சங்கிலி உயர்வு ‘ என்னும் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறுதானிய உற்பத்தி, அவற்றை பதப்படுத்துதல், ஏற்றுமதி வளத்தை அதிகரித்தல் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி அமர்வில் மூத்த அரசு அதிகாரிகள், துறை நிபுணர்கள் எடுத்துரைத்தனர்.
மத்திய வேளாண் அமைச்சக கூடுதல் செயலர் டாக்டர். அபிலக்ஷ் லிக்கி, வேளாண் அமைச்சகத்தின் பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் பிரிவின் இணை செயலர் திருமிகு. சுபா தாகூர் மற்றும் நிபுணர்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர்.
சிறுதானியங்களை உற்பத்தி செய்வதில் மட்டுமல்லாமல், அவற்றை விற்பனை செய்வதில், உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளை இணைப்பதிலும் விவசாய உற்பத்தி அமைப்புகள் பெரும் பாங்காற்றும் என்று அவர்கள் தெரிவித்தனர். சிறுதானியங்களின் சத்து , அவை ஆரோக்கியத்துக்கு வழங்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாறி வரும் பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப அவற்றை விளைவிக்க வலியுறுத்த வேண்டும் என்று கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது. இந்தியா கொண்டு வந்த தீர்மானத்தை ஐ.நா பொதுச்சபை ஏற்றுக் கொண்டதையடுத்து, 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்களின் ஆண்டு என அறிவிக்கப்பட்டது. இதற்கு 70-க்கு மேற்பட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.
பன்னோக்கு ஸ்டார்ட் அப்கள், விவசாய உற்பத்தி அமைப்புகள் இந்த இருவார நிகழ்வில் கலந்து கொண்டு, அவர்களது புதுமையான வேளாண் தொழில்நுட்ப தீர்வுகள், நீடித்த ஆரோக்கியத்துக்கு உதவும் சிறுதானிய பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.
உணவு,வேளாண்மை மற்றும் வாழ்வாதாரம்’ இருவார நிகழ்ச்சி மார்ச் 2-ம்தேதி வரை நடைபெறும்.
*********
(रिलीज़ आईडी: 1799700)
आगंतुक पटल : 200