அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
விமான உபகரணங்கள் உள்ளிட்ட உயர்மதிப்பு பொருட்களின் செப்பனிடுதலுக்கான தானியங்கி தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ள இந்திய விஞ்ஞானி
Posted On:
18 FEB 2022 2:42PM by PIB Chennai
மோல்டுகள், டர்பைன் பிளேடுகள் மற்றும் இதர விமான உபகரணங்கள் உள்ளிட்ட உயர்மதிப்பு பொருட்களை செப்பனிடுவதற்கான முழுமையான தானியங்கி தொழில்நுட்பத்தை இந்திய விஞ்ஞானி ஒருவர் உருவாக்கியுள்ளார். இதன் மூலம் குறைந்த அளவிலான மனித தலையீட்டின் மூலம் பழுதுகளை நீக்கி மறுசீரமைக்க முடியும்.
இந்தத் தொழில்நுட்பம் மறுசீரமைப்பு மற்றும் பழுதுபார்ப்புத் தொழிலை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் என்றும், தற்சார்பு இந்தியாவுக்கான அதிநவீன லேசர் உற்பத்தி சூழலியல் அமைப்பை உருவாக்குவதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள பழுதுபார்க்கும் தொழில்நுட்பங்களான வெல்டிங் மற்றும் தெர்மல் ஸ்ப்ரேயிங் ஆகியவை தற்காலிகமானவை என்பதோடு துல்லியத்தையும் வழங்குவதில்லை. மேலும், தற்போதுள்ள அனைத்து தொழில்நுட்பங்களும் பழுதுபார்க்கும் நபரின் திறனைப் பொறுத்தே அமைந்துள்ளன.
ஐஐடி பம்பாயின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் ரமேஷ் குமார் சிங், லேசரைப் பயன்படுத்தும் இந்த புதுமையான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்கள் திட்டத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் சரிபார்ப்பு மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு, பேராசிரியர் ரமேஷ் குமார் சிங்கை (+91 99309 50219, rsingh@iitb.ac.in அல்லது rameshksingh[at]gmail[dot]com) தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1799256
*****************
(Release ID: 1799429)
Visitor Counter : 180