நிதி அமைச்சகம்
புத்தாக்க மேம்பாடு மூலம் வேளாண் வளர்ச்சிக்கான நீர்நிலைகள் புதுப்பிப்பு திட்ட அமலாக்கம்: ரூ.869 கோடி கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசு, உலக வங்கி கையெழுத்து
प्रविष्टि तिथि:
18 FEB 2022 6:33PM by PIB Chennai
புத்தாக்க மேம்பாடு மூலம் வேளாண் வளர்ச்சிக்கான நீர்நிலைகள் புதுப்பிப்பு திட்டத்தை அமல்படுத்த, ரூ.869 கோடி கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசு, கர்நாடகா மற்றும் ஒடிசா அரசுகள், உலக வங்கியுடன் கையெழுத்திட்டுள்ளன. இது தேசிய மற்றும் மாநில அளவில் உள்ள அமைப்புகள் மேம்படுத்தப்பட்ட நீர்நிலை மேலாண்மை நடைமுறைகளை பின்பற்ற உதவும். இதன் மூலம் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ற வகையிலான விவசாய முறைகளை பின்பற்றி, விவசாயிகள் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் மற்றும் சிறப்பான வருமானத்தை ஈட்டுவதற்கும் உதவும்.
2030ம் ஆண்டுக்குள் 26 மில்லியன் ஹெக்டேர் தரிசு நிலங்களை வளமாக்கவும், 2023ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. நீர்நிலை மேலாண்மையை திறம்பட அமல்படுத்துதல், மானாவாரி பகுதிகளில் வாழ்வாதாரத்தை அதிகரிக்க உதவும்.
இந்த புதிய திட்டம் மூலம், இதில் பங்கு பெறும் மாநில அரசுகள், நீர்நிலை மேலாண்மை திட்டங்களை மாற்றியமைத்து, அறிவியல் அடிப்படையிலான திட்டங்களை செயல்படுத்த உதவும். நீர்நிலை மேம்பாட்டில் புதிய அணுகுமுறையை பின்பற்றவும், இத்திட்டம் உதவும்.
மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி (IBRD), கர்நாடகாவுக்கு ரூ.453.5 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.370 கோடியும் கடனுதவி அளிக்கும். மீதம் ரூ.45.5 கோடி மத்திய அரசின் நிலவளத்துறைக்கு அளிக்கப்படும். இந்த ரூ.869 கோடி (115 மில்லியன் அமெரிக்க டாலர்) கடனை 15 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799348
*****************
(रिलीज़ आईडी: 1799404)
आगंतुक पटल : 303