தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 ஜனவரி மாதத்திற்கான வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்கள் சார்ந்த அகில இந்திய நுகர்வோர் குறியீட்டு எண்கள்: தமிழ்நாடு முதலிடம்

Posted On: 18 FEB 2022 5:01PM by PIB Chennai

2022 ஜனவரி மாதத்திற்கான வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்கள் சார்ந்த அகில இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் முறையே 2 மற்றும் 1 புள்ளிகள் குறைந்து, வேளாண் தொழிலாளர்களுக்கு 1095-ஆகவும், ஊரகத் தொழிலாளர்களுக்கு 1105 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

 

வேளாண் தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண்ணின் வரிசையில் 1292 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. 869 புள்ளிகளுடன் இமாச்சலப் பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.

 

ஊரகத் தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண்ணின் பட்டியலில் 1278 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்திலும், 917 புள்ளிகளுடன் இமாச்சலப் பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.

 

விவசாயம் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களில் அதிகபட்ச சரிவு உத்தரப் பிரதேசத்தில் (தலா 9 புள்ளிகள்) ஏற்பட்டுள்ளது . முக்கியமாக கோதுமை, தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றின் விலை வீழ்ச்சி இதற்கு காரணமாகும்.

 

அரிசி, சோளம், காய்கறிகள் மற்றும் பழங்கள், ஆட்டுக்கறி உள்ளிட்டவற்றின் விலை உயர்வின் காரணமாக, விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களில் அதிகபட்சமாக உயர்வை இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் சந்தித்துள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1799300

                                                                                                *******************


(Release ID: 1799365) Visitor Counter : 314


Read this release in: English , Urdu , Hindi