தேசிய நிதி அறிவிக்கை ஆணையம்
azadi ka amrit mahotsav

தேசிய நிதி தகவல் அளித்தல் ஆணையத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தணிக்கையாளர்கள் குறித்த தற்காலிக தரவுத் தளம்

Posted On: 18 FEB 2022 3:22PM by PIB Chennai

தேசிய நிதி தகவலளித்தல் ஆணையத்தின் ஒழுங்குமுறை வரம்பிற்குள் வரும் நிறுவனங்கள் மற்றும் தணிக்கையாளர்களின் தரவு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய தரவுத்தளத்தை 31.3.21 அன்று ஆணையம் புதுப்பித்துள்ளது.

 

5,563 பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், 1,156 பட்டியலிடப்படாத நிறுவனங்கள் மற்றும் 101 காப்பீடு மற்றும் வங்கி நிறுவனங்கள் உட்பட 6,820 நிறுவனங்கள் இதில் உள்ளன. அத்தகைய நிறுவனங்களின் 2,079 தணிக்கையாளர்களின் விவரங்களும் தரவுத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

 

இது தொடர்பாக, பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின்  கார்ப்பரேட் தரவு மேலாண்மை பிரிவு மற்றும் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று பங்குச் சந்தைகளுடன் தேசிய நிதி தகவல் அளித்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

 

https://www.nfra.gov.in/nfra_domain எனும் முகவரியில் தரவு தளம்  கிடைக்கிறது.

தேசிய நிதி தகவல் அளித்தல் ஆணையம்

தேசிய நிதி தகவல் அளித்தல் ஆணையம் என்பது நிறுவனங்கள் சட்டம், 2013-ன் பிரிவு 132-ன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு ஒழுங்குமுறை அமைப்பு ஆகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799275

                                                                                                *********************

 (Release ID: 1799356) Visitor Counter : 101