சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்களில் தொலை-ஆலோசனை சேவைகள் பற்றி மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதார அமைச்சகம் ஆய்வு

Posted On: 17 FEB 2022 5:36PM by PIB Chennai

ஆயுஷ்மான் பாரத் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள், தொலை-ஆலோசனை சேவைகள், அவசரகால கொவிட் எதிர்வினை தொகுப்பு மற்றும் பிரதமரின் தற்சார்பு ஸ்வஸ்த் பாரத் திட்டம் ஆகியவற்றின் கீழ் அடைந்துள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் காணொலி மூலம் மத்திய சுகாதார செயலாளர், திரு. ராஜேஷ் பூஷன் இன்று கூட்டம் ஒன்றை நடத்தினார்.

பொது சுகாதார சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதில் இந்திய அரசு உறுதியுடன் உள்ளது என்பதை செயலாளர் தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் செயல்பாடுகள், தொலை-ஆலோசனை மையங்களாக அவற்றின் செயல்பாடு மற்றும் அவசரகால கொவிட் எதிர்வினை தொகுப்பின் கீழ் திட்டங்களை செயல்படுத்தும் நிலை ஆகியவை குறித்து விரிவான விளக்கக்காட்சி மூலம் மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. 

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் விரிவான ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பை உறுதி செய்வதற்காக, துணை சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களாக வலுப்படுத்தப்படுகின்றன என்று மத்திய சுகாதார செயலாளர் எடுத்துரைத்தார்.

கர்ப்ப கால மற்றும் குழந்தை சுகாதார சேவைகள், தொற்று நோய்கள், தொற்றாத நோய்கள், நோய்த்தடுப்பு பராமரிப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு, வாய்வழி சுகாதாரம், காது, மூக்கு, தொண்டை பராமரிப்பு மற்றும் அடிப்படை அவசரகால சிகிச்சைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான சேவைகளுக்கு தடுப்பு, ஊக்குவிப்பு, மறுவாழ்வு மற்றும் குணப்படுத்தும் பராமரிப்பு வழங்குவதில் இம்மையங்களின் பங்கு முக்கியமானவை ஆகும்.

31 மார்ச் 2022-க்குள் 1.10 லட்சம் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் எனும் இலக்கை செயல்படுத்துவதை உறுதி செய்ய மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாநிலங்களுக்கான நிதியை அமைச்சகம் வெளியிடுவதற்கு ஏதுவாக பிரதமரின் தற்சார்பு ஸ்வஸ்த் பாரத் திட்டத்தின் கீழ் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பப்படும் முன்மொழிவுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்தவும் மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799064

**********



(Release ID: 1799126) Visitor Counter : 171