கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

ஹால்டியா முதல் பாண்டு வரை இந்தியா -வங்கதேசம் நெறிமுறைப் பாதை வழியாக எஃகு ஏற்றிச் செல்லும் முதல் சரக்கு கப்பலின் பயணம்: மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தொடங்கி வைத்தார்

Posted On: 16 FEB 2022 5:45PM by PIB Chennai

அசாம் மாநிலத்தில் உள்ள ஹால்டியா முதல் பாண்டு வரை  இந்தியா -வங்கதேசம் நெறிமுறைப்  பாதை வழியாக எஃகு ஏற்றிச் செல்லும் முதல் சரக்கு கப்பலின் பயணத்தை, கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால்  இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் இத்துறை இணையமைச்சர் திரு சாந்தனு தாகூர் கலந்து கொண்டார்.

இந்த முதல் பயணம் பல வகையான சரக்குப்  போக்குவரத்தை, ஆறு மற்றும் கடல் மூலமாக கொண்டு செல்லும் வழிமுறையைக்  காட்டுகிறது. இந்தச்  சரக்கு கப்பலில்  டாடா ஸ்டீல் நிறுவனத்தின் 1798 மெட்ரிக் டன் எஃகுப்  பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.  இந்த எஃகுப்  பொருட்கள் ரயில் மூலம் ஹால்டியா துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு சரக்குக்  கப்பலில்  ஏற்றப்பட்டது. ஓசன் வேல் சர்வீஸஸ் என்ற நிறுவனம் இந்த சரக்கு கப்பல்களை இயக்குகிறது. இந்தச்  சரக்கை கொண்டு செல்ல சுங்கத்துறை சிறப்பு அனுமதி வழங்கியது.  இந்த படகுகள் ஹால்டியாவில் இருந்து அசாமின் பாண்டு முனையத்துக்கு இந்தியா-வங்கதேசம் நெறிமுறைப்  பாதை வழியாகச்  செல்லும்.  மறுமார்க்கத்தில் இந்த சரக்குக்  கப்பல்கள் நிலக்கரியைக் கொண்டு வரும்.

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக தேசிய நீர்வழிப் போக்குவரத்து-1, இந்தியா-வங்கதேச நெறிமுறைப்  பாதை வழி மற்றும் பிரம்மபுத்ரா நிதி வழித்தடத்தில் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்  செய்தி குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798801

*********



(Release ID: 1798902) Visitor Counter : 163


Read this release in: English , Urdu , Hindi , Kannada