மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

நீர்வாழ் விலங்கின நோய்கள் குறித்த தேசிய கண்காணிப்புத்திட்டம் பற்றிய இணைய வழிக்கருத்தரங்கு

Posted On: 16 FEB 2022 5:43PM by PIB Chennai

சுதந்திரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்திற்குட்பட்ட மீன்வளத்துறை சார்பில், “நீர்வாழ் விலங்கின நோய்கள் குறித்த தேசிய கண்காணிப்புத் திட்டம்: இந்தியாவில் நோய் ஆளுகை முறையை ஏற்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கை என்ற தலைப்பில் 15 பிப்ரவரி 2022 அன்று இணையவழிக் கருத்தரங்கு நடைபெற்றது.  மீன்வளத்துறை அதிகாரிகள் இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழக நிறுவனங்கள், பல்வேறு மாநில / யூனியன் பிரதேசங்களின் மீன்வளத்துறை அதிகாரிகள், மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், கால்நடை அறிவியல் மற்றும் மீன்வள பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், தொழில் முனைவோர், விவசாயிகள், கோழிப்பண்ணை உரிமையாளர்கள், மாணவர்கள் மற்றும் மீன்வளர்ப்பு தொழில் துறையினர் உட்பட 150-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் உரையாற்றிய இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் மீன்வள அறிவியல் துறை துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் ஜோய் கிருஷ்ண ஜெனா, மீன்வளத் தொழிலில் பல்வேறு திறமைகளை உள்ளடக்கிய மாநிலங்களைக் கொண்ட நாடாக  உள்ள இந்தியாவில், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பரவக் கூடிய நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் உரிய கண்காணிப்பு செயல்திட்டம் தேவை என்றார். அந்த வகையில், இந்தியாவின், நீர்வாழ் விலங்கின நோய்கள் குறித்த தேசிய கண்காணிப்புத் திட்டம், ஒருங்கிணைந்த கண்காணிப்புக்கான சிறந்த உதாரணமாக திகழ்கிறது என்றும் தெரிவித்தார்.  இக்கருத்தரங்கில் தொடக்க உரையாற்றிய மத்திய மீன்வளத்துறையின் உள்நாட்டு மீன்வளர்ப்புக்கான இணை செயலாளர் திரு சாகர் மெஹ்ரா, தீவிரம் மற்றும் பன்முக நடவடிக்கைகள் மூலம் மேற்கொள்ளப்படும் நீர்வாழ் உயிரின உற்பத்தி காரணமாக நீர்வாழ் உயிரினங்களுக்கு பல்வேறு புதிய நோய்கள் பரவும் அபாயமும்  உள்ளதாக குறிப்பிட்டார். இது போன்ற நோய்கள் முன்கூட்டியே கண்டறிந்து அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798800

 

***************

 



(Release ID: 1798843) Visitor Counter : 150


Read this release in: Hindi , Telugu , English , Urdu