புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் திறன் வளர்த்தல் திட்டம் 31.03.2026 வரை நீட்டிப்பு
Posted On:
16 FEB 2022 5:11PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் திறன் வளர்த்தல் திட்டம் 31.03.2026 வரையோ அல்லது மேற்கொண்டு ஆய்வு செய்யப்படும் வரையோ நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. செலவினங்கள் நிதிக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் நிதி உச்சவரம்பு ஆகியவற்றின் அடிப்படையில் இது செய்யப்படும்.
பதினைந்தாவது நிதி ஆணையச் சுழற்சியில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதியின் அளவு ரூபாய் 3179 கோடி ஆகும். புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் மத்திய துறைத் திட்டமான திறன் வளர்த்தல் திட்டம், சரியான நேரத்தில், நம்பத்தகுந்த, அதிகாரப்பூர்வ புள்ளியியல் விவரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
திறன் வளர்த்தல் (முக்கிய) திட்டம் மற்றும் புள்ளியியல் வலுவாக்கலுக்கான ஆதரவு மற்றும் பொருளாதாரக் கணக்கெடுப்பு ஆகிய இரண்டு துணைத் திட்டங்களை இத்திட்டம் உள்ளடக்கியதாகும். அமைச்சகத்தின் அனைத்து புள்ளியியல் மற்றும் தரவு மேலாண்மை செயல்பாடுகளுக்குப் பொறுப்பான இத்திட்டம் நாட்டின் அதிகாரப்பூர்வ புள்ளியியல் அமைப்பின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பில் முக்கியப் பங்காற்றுகிறது.
பொருளாதாரத்தின் முக்கிய கூறுகளை ஆய்வு செய்யும் அமைச்சகத்தின் மிகப்பெரிய அளவிலான ஆய்வுகள் அரசின் கொள்கை வகுத்தலுக்குத் தேவையான தரவு உள்ளீடுகளை வழங்குகின்றன. ஆதாரம் சார்ந்த முடிவெடுத்தலுக்கு இவை உதவுவதோடு கொள்கைத் திட்டமிடலிலும் அரசால் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798790
************
(Release ID: 1798834)
Visitor Counter : 212