நித்தி ஆயோக்
ஃபின்டெக் ஓப்பன் ஹேக்கத்தானை போன்பே உடன் இணைந்து நிதி ஆயோக் தொடங்கியது
Posted On:
16 FEB 2022 2:18PM by PIB Chennai
நிதி த் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதற்கான ஃபின்டெக் ஓப்பன் மாத நிகழ்வுகளின் ஒரு பகுதியாக ஃபின்டெக் ஓப்பன் ஹேக்கத்தானை போன்பே உடன் இணைந்து நிதி ஆயோக் தொடங்கியுள்ளது.
ஃபின்டெக்கிற்கான மிகவும் ஆக்கப்பூர்வமான தீர்வுகளை உருவாக்குவதற்கான அனைவருக்குமான முதல் ஹேக்கத்தான் நிகழ்வு இதுவாகும். இந்தியா முழுவதிலும் உள்ள கண்டுபிடிப்பாளர்கள், டிஜிட்டல் படைப்பாளிகள் மற்றும் டெவலப்பர்கள் சிந்திக்கவும், யோசனைகளை வெளிப்படுத்தவும், கோடிங் உருவாக்கவும் இந்த ஹேக்கத்தான் வாய்ப்பளிக்கும்.
ஹேக்கத்தான் பங்கேற்பாளர்கள், போன் பே பல்ஸ் போன்ற திறந்த-தரவு தளங்களை, கணக்குத் திரட்டி போன்ற கட்டமைப்புகளுடன் பயன்படுத்தி கீழ்காணும் தீர்வுகளை வழங்கலாம்:
* நிதி உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தும் வகையில் கடன், காப்பீடு அல்லது முதலீடுகளுக்கான மாற்று இடர் மாதிரிகள்.
* பல்வேறு மக்கள்தொகை மற்றும் நிலப்பரப்புகளுக்கான புதுமையான நிதிச் சேவை படைப்புகள்
* டிஜிட்டல் பேமெண்ட் தரவுகளின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட காட்சிப்படுத்தல் மற்றும் நுண்ணறிவு
வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ 1.50 லட்சம் ஒரு குழுவுக்கும், இரண்டாம் பரிசாக ரூ 1 லட்சம் வீதம் இரண்டு அணிகளுக்கும், மூன்றாம் பரிசாக ரூ 75,000 வீதம் மூன்று குழுக்களுக்கும் வழங்கப்படும்.
பதிவு செய்து கொள்வதற்கான கடைசி தேதி 2022 பிப்ரவரி 23 இரவு 11.59 மணியாகும். https://cic.niti.gov.in/fintech-open-month-hackathon.html எனும் முகவரியில் பதிவு செய்து கொள்வதோடு மேலும் தகவல்களையும் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில ச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798733
*******
(Release ID: 1798780)
Visitor Counter : 316