எரிசக்தி அமைச்சகம்
நான்காவது இந்தியா ஆஸ்திரேலியா எரிசக்தி பேச்சுவார்த்தைக்கு மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் தலைமை.
Posted On:
15 FEB 2022 5:58PM by PIB Chennai
நான்காவது இந்தியா ஆஸ்திரேலியா எரிசக்தி பேச்சுவார்த்தை பிப்ரவரி 15, 2022 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்திய தரப்பில் இருந்து மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு .ஆர். கே. சிங் மற்றும் ஆஸ்திரேலிய தரப்பிலிருந்து அந்நாட்டின் எரிசக்தி மற்றும் உமிழ்வு குறைப்பு அமைச்சர் திரு. ஆங்கஸ் டைலர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
எரிசக்தி மாற்றம் என்பது முக்கிய விவாதப் பொருளாக இருந்த இக்கூட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார சிக்கனம், சேமிப்பு, மின்சார வாகனங்கள், முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட தத்தமது நாடுகளின் எரிசக்தி மாற்ற நடவடிக்கைகள் குறித்து இரு அமைச்சர்களும் விரிவாக பேசினர்.
வளரும் நாடுகளின் எரிசக்தி மாற்ற இலக்குகளை எட்ட தேவையான பருவநிலை நிதி உதவிக்கான தேவை குறித்து இந்திய தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டது. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பம் குறித்த ஒப்புதல் கடிதம் ஒன்றும் கூட்டத்தின் போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே கையெழுத்திடப்பட்டது.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பத்தின் செலவுகளைக் குறைப்பதிலும் சர்வதேச உமிழ்வு குறைப்பை மேம்படுத்துவதிலும் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு இந்த ஒப்புதல் கடிதம் வழிவகுக்கும். மிகவும் செலவு குறைந்த சூரிய சக்தி மற்றும் தூய்மை ஹைட்ரஜன் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டை அதிகரிப்பதிலும் இது கவனம் செலுத்தும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798522
*************************
(Release ID: 1798568)
Visitor Counter : 254