வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 ஜனவரியில் இந்தியாவின் ஏற்றுமதி 36.76% அதிகரிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 15 FEB 2022 1:55PM by PIB Chennai

2022 ஜனவரியில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதிகளின் (விற்பனை மற்றும் சேவைகள் இணைந்து) மதிப்பு 61.41 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 36.76 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும், ஜனவரி 2020-ஐ விட 38.90 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும் இது வெளிப்படுத்துகிறது.

ஜனவரி 2022-ல் ஒட்டுமொத்த இறக்குமதியின் மதிப்பு 67.76 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 30.54 சதவீத மெதுவான வளர்ச்சியையும், ஜனவரி 2020-ஐ விட 30.19 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும் இது வெளிப்படுத்துகிறது.

ஏப்ரல்-ஜனவரி 2021-22-ல் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதிகளின் மதிப்பு (விற்பனை மற்றும் சேவைகள் இணைந்து) 545.71 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 37.68 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும் ஏப்ரல்-ஜனவரி 2019-20 விட 23.29 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும் இது  காட்டுகிறது/

ஏப்ரல்-ஜனவரி 2021-22-ல் ஒட்டுமொத்த இறக்குமதிகளின் மதிப்பு 616.91 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 54.35 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும், ஏப்ரல்-ஜனவரி 2019-20-ஐ விட 20.15 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798469


(வெளியீட்டு அடையாள எண்: 1798496) வருகையாளர் எண்ணிக்கை : 458
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi