சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மூத்த குடிமக்கள் திட்டத்தின் கீழ் தேசிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இலவச உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம்

Posted On: 14 FEB 2022 6:37PM by PIB Chennai

மத்தியப் பிரதேசத்தில் உள்ள திகம்கரில் நடைபெற்ற முகாம் ஒன்றில் 1571 மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இலவச உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

 

பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுகம்யா கைத்தடி மற்றும் திறன் வளர்த்தல் பயிற்சி மற்றும் புனரமைப்பு மையத்திற்கான ஸ்வவ்லம்பன் கேந்திரா கன்டெய்னர் 2022 பிப்ரவரி 14 அன்று நடைபெற்ற முகாமில் அறிமுகப்படுத்தப்பட்டன.

 

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மூத்த குடிமக்கள் திட்டத்தின் கீழ் உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை அலிம்கோ மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை ஏற்பாடு செய்திருந்தது.

 

முகாமை தொடங்கி வைத்த நிகழ்ச்சியின் தலைமை விருந்தினரான மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுகம்யா கைத்தடியை அறிமுகப்படுத்தியதோடு, திறன் வளர்த்தல் பயிற்சி மற்றும் புனரமைப்பு மையத்திற்கான ஸ்வவ்லம்பன் கேந்திரா கன்டெய்னரையும் தொடங்கி வைத்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்து சமத்துவ சமுதாயத்தை நிறுவுவதற்கான பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருவதாகக் கூறினார்.

 

விளிம்பு நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதற்காக அவரது அமைச்சகம் உறுதி கொண்டுள்ளதாக டாக்டர் வீரேந்திர குமார் மேலும் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798340

                                                                                                *************

 


(Release ID: 1798360) Visitor Counter : 243


Read this release in: English , Urdu , Hindi , Punjabi