சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்ட அமலாக்கத்தை செறிவூட்டும் நோக்கில் பல திட்டங்களின் கீழ் உள்ள பயனாளிகளின் தரவுகள் ஒருங்கிணைப்பு

Posted On: 14 FEB 2022 5:56PM by PIB Chennai

ஆயுஷ்மான் பாரத்  பிரதம மந்திரியின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தை, தேசிய சுகாதார ஆணையம் கட்டாயமாக்குகிறது. ஆயுஷ்மான் பாரத் மக்கள் ஆரோக்கிய திட்டம், ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களும் மாவட்டங்களில் உள்ள இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனையில் சிகிச்சை பெற  ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை  சுகாதார காப்பீட்டை வழங்குகிறது.  சமூக-பொருளாதார மற்றும்  ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 லிருந்து, ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்துக்கு 10.74 கோடி பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.  

 

பயனாளிகள் இடையே  விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சமூக பொருளாதார மற்றும் ஜாதி அடிப்படையிலான பயனாளிகளின் தரவுகளை செறிவூட்டுதல் உட்பட திட்ட அமலாக்கத்தின் பல்வேறு அம்சங்களை வலுப்படுத்தும் வகையில், நலத்திட்டங்களை அமல்படுத்தும் பல்வேறு அமைச்சகங்களுடன் தேசிய சுகாதார ஆணையம் இணைந்து செயல்படுகிறது.  ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயனாளிகளின் தரவு செறிவூட்டலில் தரவுகளின் கூடுதல் அளவுருக்கள் சேர்க்கப்படும். ஆயுஷ்மான் பாரத் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் பெரும்பாலான பயனாளிகள், தேசிய உணவுப்  பாதுகாப்பு சட்டப்படி  பயன்களை பெற தகுதியானவர்கள்.  சமூக, பொருளாதார மற்றும் ஜாதி அடிப்படையிலான பயனாளிகளின் தரவுகளை , தேசிய உணவுப்  பாதுகாப்புச்  சட்டத்தின் தரவுகளுடன் ஒருங்கிணைக்கும் பணியில் தேசிய சுகாதார ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம்  ரேஷன் அட்டை எண்ணைப்  பயன்படுத்தி, ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்ட உரிமைகள் தொடர்பான தகவல்களைப்  பயனாளிகள் பெற முடியும். இது பயனாளியின் அடையாள நடைமுறையை மிகவும் சௌகரியமாக்கும்.

 

ஆனாலும், பொதுவான அடையாள முறை இருந்தால் மட்டுமே, அரசின் பல நல திட்டங்களில் உள்ள பயனாளிகளின் தரவுகளை , பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியும்.  நாடு முழுவதும் பொதுவான அடையாளத்  தரவாக ஆதார் உள்ளது. இதன் மூலம் இந்த ஒருங்கிணைப்பை மேற்கொள்ள முடியும்.

இந்த நோக்கில், ஒழுங்கு மேலாண்மை உத்தரவை இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(உதய்) கடந்த ஆண்டில் வெளியிட்டது.  இந்த ஒழுங்கு மேலாண்மை உத்தரவு ஆதார், தரவுகளை அரசின் பல துறைகளுடன்  பகிர்ந்து கொள்ளச் செய்கிறது.

 

இதேபோல், உணவு மற்றும் பொது விநியோகத்துறையும் ஒழுங்கு மேலாண்மை உத்தரவை  கடந்த ஜனவரி 6ம் தேதி பிறப்பித்தது. இதன் மூலம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தேசிய உணவுப்  பாதுகாப்புச்  சட்ட குடும்ப அட்டைத்  தரவுகளை, ஆதார் எண் தரவுகளுடன்  பகிர்ந்து கொள்ள ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. 

 

உணவு மற்றும் பொது விநியோகத்துறையின்  ஒழுங்கு மேலாண்மை உத்தரவைத்  தொடர்ந்து, தரவு ஒருங்கிணைப்பு தொடர்பாக தேசிய சுகாதார ஆணையம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து செயல்படுகிறது. இப்பணி பல மாநிலங்களில் ஏற்கனவே தொடங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கிலச்  செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798319

                                                                *********************************

 



(Release ID: 1798350) Visitor Counter : 1715