நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜனவரி மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 6.13 சதவீதம் அதிகரித்து 79.60 மில்லியன் டன்னை எட்டியுள்ளது

Posted On: 14 FEB 2022 3:54PM by PIB Chennai

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 2020 ஆம் ஆண்டு இதே காலத்தில் 75 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், ஜனவரி 2022-ல் 6.13% அதிகரித்து 79.60 மில்லியன் டன்னை எட்டியுள்ளது.  மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள தற்காலிக புள்ளி விவரங்களின் படி, கோல் இந்தியா நிறுவனம் 64.50 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்து 2.35% வளர்ச்சியையும், சிங்கரேனி சுரங்க நிறுவனம் 6.03 மில்லியன் டன் உற்பத்தி செய்து, 5.42% வளர்ச்சியையும் அடைந்துள்ளன. 

சுரங்கங்களில் இருந்து அனுப்பப்படும் நிலக்கரி அளவும் ஜனவரி 2022-ல் 10.80% அதிகரித்து 75.55 மில்லியன் டன்னாக உள்ளது.  நாட்டில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் 35 முன்னணி சுரங்கங்களில் 14 சுரங்கங்கள் 100% க்கும் அதிகமான  செயல்திறனையும், வேறு 6 சுரங்கங்கள் 80 முதல் 100 சதவீத செயல்திறனையும் வலுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798274

***************


(Release ID: 1798330) Visitor Counter : 193