நிதி அமைச்சகம்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 1154.90 கோடி நிதி விடுவிப்பு
Posted On:
14 FEB 2022 5:45PM by PIB Chennai
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்குவதற்காக நான்கு மாநிலங்களுக்கு ரூ. 1154.90 கோடி நிதியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை விடுவித்துள்ளது. திங்கட்கிழமை அன்று விடுவிக்கப்பட்ட இந்த நிதி ஆந்திரப்பிரதேசம் (ரூ.225.60 கோடி), பீகார் (ரூ.769 கோடி), குஜராத் (ரூ.165.30 கோடி) மற்றும் சிக்கிம் (ரூ.5 கோடி) வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து கண்டோன்மெண்ட் வாரியங்கள் உட்பட 10 லட்சத்திற்கும் மிகாத மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தற்போது விடுவிக்கப்பட்டுள்ள நிதியையும் சேர்த்து 2021-22 –ல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக மொத்தம் ரூ.9,172.63 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு ரூ.741.75 நிதி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798314
***************
(Release ID: 1798328)