பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிங்கப்பூரில் விமான கண்காட்சி -2022-ல் இலகு ரக தேஜஸ் போர் விமானம் பங்கேற்கிறது

प्रविष्टि तिथि: 12 FEB 2022 2:27PM by PIB Chennai

சிங்கப்பூரில் நடைபெறும் விமான கண்காட்சி -2022-ல் பங்கேற்க 44 பேரைக் கொண்ட இந்திய விமானப்படையினர் சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தனர்.    இந்த விமான கண்காட்சி வரும் 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.   சர்வதேச விமான தொழில்துறை இரண்டாண்டுக்கு ஒருமுறை தங்களது தயாரிப்புகளை  காட்சிப்படுத்த சிங்கப்பூர் விமானக் கண்காட்சி வழிவகுத்துள்ளது.

பல்வேறு நாடுகள் பங்கேற்கும் இக்கண்காட்சியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் எம்கே-I போர் விமானத்தை இந்திய விமானப்படை காட்சிப்படுத்தவுள்ளது.

அத்துடன் ராயல் சிங்கப்பூர் விமானப்படை மற்றும் பிறநாடுகளின் பிரதிநிதிகளுடன் இந்திய விமானப்படையினர் உரையாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

***************


(रिलीज़ आईडी: 1797877) आगंतुक पटल : 367
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali