விவசாயத்துறை அமைச்சகம்

ஜிடிபி-ல் வேளாண் ஏற்றுமதியின் பங்கு

Posted On: 11 FEB 2022 5:43PM by PIB Chennai

2019-20-ம் ஆண்டில் இந்தியாவில் வேளாண் ஏற்றுமதி ரூ.2,52,297 கோடியாக இருந்தது. இது நடப்பு விலைகளின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதமாகும்.    கொவிட்-19 பெருந்தொற்றுக்கிடையில் 2020-21-ல் வேளாண் ஏற்றுமதி 22.8 சதவீதம் அதிகரித்து ரூ.3,09,939 கோடியாக இருந்தது. இது ஜிடிபி-ல் 1.6 சதவீதம் ஆகும்.

  மாநிலங்களவையின் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

 நவீன உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கவும், உணவு உற்பத்தி அலகுகளை மேம்படுத்தவும், மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகம்  மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய பிரதம மந்திரி கிசான் சம்பாத யோஜனா என்னும் திட்டத்தை 2016-17 முதல் செயல்படுத்தி வருகிறது.  மேலும் பிரதம மந்திரி குறு உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப வணிக உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் ஒரு மாவட்டம், ஒரு பொருள் அணுகுமுறையை பின்பற்றி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797686

***************

 



(Release ID: 1797744) Visitor Counter : 171


Read this release in: English , Urdu , Bengali