உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
உணவு பொருட்களுக்கான பரிசோதனைக் கூடங்கள்
प्रविष्टि तिथि:
11 FEB 2022 12:36PM by PIB Chennai
நாட்டில் உணவுப் பொருட்களுக்கான பரிசோதனைக் கூடங்கள் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 726 பரிசோதனை கூடங்களில் 585 கூடங்கள் சர்வதேச தர அங்கீகாரத்தை பெற்றுள்ளன. பரிசோதனைக் கூடங்கள், சர்வதேச தரச்சான்றிதழ் பெறுவதற்கு ஏற்றவகையில் நிதியுதவி அளிக்க மத்தியஅரசு 3 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசு சொந்தத்தில் உணவு பரிசோதனை கூடத்தை அமைக்கவில்லை. தேவைக்கேற்ப உணவு பரிசோதனை கூடங்களுக்கான கருத்துருக்கள் பெறப்பட்டு வருகின்றன.
மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.
கூடுதல் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797521
***************
(रिलीज़ आईडी: 1797560)
आगंतुक पटल : 294