வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மெட்ரோ ரயில் திட்டங்களை அமல்படுத்த தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிடமிருந்து 16 திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் தகவல்

प्रविष्टि तिथि: 10 FEB 2022 5:10PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர்  திரு ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:

நகர்ப்புற மேம்பாட்டில், நகர்ப்புற போக்குவரத்து ஒருங்கிணைந்த பகுதி. இது மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம். இதனால், மெட்ரோ ரயில் திட்டங்கள் உட்பட நகர்ப்புற போக்குவரத்து கட்மைப்பை உருவாக்குவது, அதற்கான நிதியை திரட்டுவது மாநில அரசுகளின் பொறுப்பு.  மெட்ரோ ரயில் கொள்கை 2017-ன்படி, நகரங்களில் இது போன்ற திட்டங்களுக்கான நிதி உதவியை, திட்டங்களின் சாத்தியம், நிதி ஆதாரம்,  மாநிலங்களின் விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய அரசு    வழங்கிவருகிறது. மத்திய அரசின் நிதி உதவிக்காக குஜராத் அரசு எந்த புதிய மெட்ரோ ரயில் திட்டத்தையும் சமர்பிக்கவில்லை.

தமிழ்நாடு,  தில்லி, மகாராஷ்டிரா, கேரளா, உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து மெட்ரோ ரயில் திட்டங்களை அமல்படுத்த 16 திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு மத்திய அமைச்சர்  திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

**********


(रिलीज़ आईडी: 1797410) आगंतुक पटल : 202
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi