தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய வேலைவாய்ப்புக் கொள்கை

இடுகை இடப்பட்ட நாள்: 10 FEB 2022 1:25PM by PIB Chennai

தேசிய வேலைவாய்ப்புக் கொள்கை உருவாக்கத்திற்கான குழு எதுவும் தற்போது இல்லை. நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை நிலைமைக்கான பல்வேறு தன்மைகளை ஆய்வு செய்யும் பொருட்டு மத்திய அரசு 3 ஆய்வுகளை நடத்தியது.

(i)            வேலைவாய்ப்பு ஆய்வு அடிப்படையிலான அகில இந்திய காலாண்டு நிலைமை

(ii)          புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த அகில இந்திய ஆய்வு

(iii)         வீட்டு வேலை பணியாளர்கள் குறித்த அகில இந்திய ஆய்வு

இந்த ஆய்வுகள் முறை சார்ந்த மற்றும் முறை சாராத துறைகளை உள்ளடக்கியது.

மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு.ராமேஸ்வர் தெலி மாநிலங்களவையில் இன்று இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

****


(வெளியீட்டு அடையாள எண்: 1797222) வருகையாளர் எண்ணிக்கை : 291
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Bengali