உள்துறை அமைச்சகம்
அவ்வப்போது ஏற்படும் இயற்கை பேரிடர்களுக்கான கொள்கை
Posted On:
09 FEB 2022 3:33PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு. நித்யானந்த் ராய் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
இயற்கைப் பேரிடர்களைச் சமாளிப்பதற்கான தயார்நிலையை தனது தொடர் முயற்சிகள் மூலம் அரசு கணிசமாக மேம்படுத்தியுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் படி, முழுமையான, செயலூக்கமான, பாதுகாப்பான மற்றும் பேரிடர்களை எதிர்கொள்ளும் இந்தியாவை உருவாக்குவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் பேரிடர் மேலாண்மைக்கான தேசியக் கொள்கை வெளியிடப்பட்டது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் தேசிய பேரிடர் மேலாண்மைத் திட்டம் 2016-ல் வெளியிடப்பட்டது. 2019-ல் மறுஆய்வுக்குப் பிறகு இது திருத்தப்பட்டது. இந்திய அரசு மற்றும் மாநிலங்களின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
எந்தவொரு பேரிடர் சூழ்நிலையையும் திறம்பட எதிர்கொள்வதற்காக, தேசிய பேரிடர் மீட்புப் படையை இந்திய அரசு நிறுவியுள்ளது. மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக என்டிஆர்எஃப் அகாடமி எனும் முன்னணி அமைப்பை நாக்பூரில் இந்திய அரசு நிறுவியுள்ளது.
மேலும், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது ஒரு தொடர்ச்சியான செயலாகும். இத்தகைய பணியாளர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலைக்கான வழக்கமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796818
*****************
(Release ID: 1796949)
Visitor Counter : 557