சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ஃபாஸ்டேக் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த சுங்கக் கட்டண வசூல்

Posted On: 09 FEB 2022 2:37PM by PIB Chennai

நாடு முழுவதும் 31 ஜனவரி 2022 வரை 4.59 கோடிக்கும் மேற்பட்ட  ஃபாஸ்டேகுகள் விநியோகிக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலைகளில் ஃபாஸ்டேகுகள் மூலம் இதுவரை 58 ஆயிரத்து 188 கோடியே 53 லட்சம் ரூபாய் சுங்கக் கட்டணமாக வசூலாகியுள்ளது என மத்திய சாலைப் போக்குவரத்து  மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், ஜனவரி 2020 முதல் 5, பிப்ரவரி 2022 வரை ஃபாஸ்டேக் பயன்படுத்தும் 12.5 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து தவறாக வசூலிக்கப்பட்ட தொகை திருப்பி அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுங்கக்கட்டண வசூல் மையங்களில் ஃபாஸ்டேக் மூலம் தவறாக கட்டணம் வசூலிக்கப்படுவதைக் குறைக்க / ஒழிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேற்கொண்டு வருவதாகவும் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796797

 

***************



(Release ID: 1796924) Visitor Counter : 206


Read this release in: English , Urdu , Bengali