சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பதாகைகளை அகற்றுதல்
Posted On:
09 FEB 2022 2:36PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு. நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
அங்கீகரிக்கப்படாத விளம்பர சாதனங்கள்/பதாகைகள்/விளம்பரங்களை அகற்றுவது தொடர்பான வழிகாட்டுதல்கள் தில்லி நகராட்சி அமைப்புகளின் தில்லி வெளிப்புற விளம்பரக் கொள்கை 2017-ல் உள்ளன (மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது).
சொத்துக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் தில்லி சட்டம்-2007-ன் படியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தில்லி அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையால் ஒரு கொள்கை உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் பிரிவு 116 படி, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்த நிறுவனமும் மாநில அரசின் அதிகாரிகளிடம் உதவி பெறலாம். அதன்படி, உள்ளூர் நிர்வாகத்தின் தொடர்ச்சியான உதவியுடன் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் உள்ள விளம்பரங்களை அகற்றும் பணி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796796
******
(Release ID: 1796860)